திருப்பூரில் சாலையோர இட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..!
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். திருப்பூரில் எம்ஜிஆர் சிலையில் இருந்து மாநகராட்சி பூங்கா செல்லும் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகன விபத்துகளும் நேரிட்டன. இதனால் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





