--- --:--:-- --

சளி தொல்லைக்காக சென்ற சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட்..!

10

டலூர் அரசு மருத்துவமனையில் சளி பாதித்த சிறுமிக்கு நாய்கடிக்கான ஊசி தவறுதலாக செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக இருந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

சளித் தொல்லையால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஊசி போடும் பணியில் இருந்து செவிலியர் மருத்துவரின் பரிந்துரையை பார்க்காமல் சிறுமிக்கு நாய் கடிக்கு செலுத்தும் ஊசியை போட்டுள்ளார்.

 

மருத்துவர் வழங்கிய சீட்டை படிக்காமல் ஊசி போடுகிறீர்களே என கருணாகரன் கேள்வி எழுப்பிய பொழுது நாய் கடிக்கு வழக்கமாக இரண்டு ஊசிகள் போடுவோம் என செவிலியர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரன் மகளுக்கு சளி பாதிப்பு தான் இருப்பதாக தெரிவித்த நிலையில் செவிலியர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர்.

 

இதற்கிடையே ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயக்கம் அடைந்ததால் அதிர்ந்து போன அவர் மகளை உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு ஊசியை மாற்றி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon