--- --:--:-- --

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்..!

7

நீலகிரி அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவனை தற்செயலாக அந்த பள்ளிக்கு சென்ற மத்திய துணை ராணுவப்படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஆத்திகுனாய் ஸ்ட்ரீட் பகுதியில் தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் அங்கு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வரும் முகமது என்பவரின் 7 வயது மகன் ஷாபிக் நண்பருடன் ஆற்றி குளிக்க சென்றான்.

 

எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளத்தில் அவன் அடித்து சொல்லப்பட்டான். உடனிருந்த சிறுவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த வழியே சென்ற மத்திய துணை ராணுவ படை வீரர் ஆற்றில் குளித்த சிறுவனை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon