திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறிய குடிநீர்..!
ஜப்பானில் ரத்த சிவப்பாக நதிநீர் மாறியதன் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள ஓகேனா மாகாணத்தில் உள்ள லாக்கோ நதி திடீரென்று கருஞ்சவப்பு நிறமாக மாறி உள்ளது. இதை கண்ட உள்ளூர் மக்களும் பார்வையாளர்களும் பீதிக்கு உள்ளாக்கினார்.
அங்குள்ள ஒரு மதுபான அறையில் உள்ள குளிரூட்டும் அறையிலிருந்து இந்த கசிவு தொடங்கியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கசிவு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மதுபான தயாரிப்பானை வெளியிட்ட அறிக்கையில் உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் தண்ணீர் வாயிலாக தண்ணீர் கலந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார அபாயம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





