செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை..!
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெற எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது தரப்பு கோரிக்கையை எடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பான மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





