குடிநீரில் இருந்த புழுக்களால் வாந்தி எடுத்த மக்கள்..!
தென்காசி அருகே ஊராட்சி தலைவர் சமுதாய ரீதியாக செயல்பட்டு புழுக்கள் நிறைந்த குடிநீரை விநியோகம் செய்ததாக கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை பகுதி 12-வது வார்டில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு லாரியுடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அந்த குடிநீர் மாசடைந்து புழுக்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் அதனை குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதுடன் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளது.
புளியரை ஊராட்சி தலைவர் சமுதாய ரீதியாக செயல்படுவதாகவும் கூறி அந்த பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





