ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஜல்லிக்கட்டு மாடுகள் மூலம் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது. வழக்கு விசாரணையின் பொழுது ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது. சாதுவான விலங்காக காளை மாடுகளை வற்புறுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுவதாக பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு.
பாரம்பரியம், இறைவழிபாடு சார்ந்த அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை விசாரிக்க கூடாது என்ற வாதத்தை தமிழக அரசு முன்வைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





