பேருந்து நிலையத்தில் இருந்த கடைக்குள் புகுந்த பாம்பு.. அலறி அடித்து ஓடிய கடைக்காரர்..!
கோவை நகர பேருந்து நிலையத்தில் உள்ள அலைபேசி கடையில் பாம்பு புகுந்துள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின் பக்கத்திலிருந்து மேசையின் மீது சென்றுள்ளது.
பாம்பு வருவதை கூட கவனிக்காத கடைக்காரர் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் காலில் ஏதோ ஊறுகிறது என பார்த்தபொழுது பாம்பு இருப்பதை கண்டு பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார். இது தொடர்பாக கண்காணிப்பு காட்சி வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





