--- --:--:-- --

சாக்கடையில் தவறி விழுந்த குழந்தை..!

7

தேனி மாவட்டம் ராஜாவாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுநீரில் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மீட்கப்பட்ட நிலையில் சிறுமி விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

வாய்க்காலில் தற்பொழுது தூர்வாரும் பணியில் நடைபெறும் நிலையில் அங்கு கழிவு நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் பங்களா மேடு பகுதியில் வசித்து வரும் முத்து மாரியம்மாள் தம்பதியின் நான்கு வயது மகள் வாய்க்காலில் விழுந்துள்ளார்.

 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் சிறுமி மீட்கப்பட்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பு சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்து நிலையில் அதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon