திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் திருட்டு..!
சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடி சென்ற சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
சூரியவம்சம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் விக்ரமன். இவர் சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு மனைவியின் உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்பொழுது அவர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தியுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது அந்த வாகனம் காணாமல் போய் உள்ளது. உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக காலை 11 மணியளவில் பட்டப்பகலில் இரண்டு நபர்கள் அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





