காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..!
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவது வழக்கம்.
அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இருளும் சூழ்ந்திருந்தது. இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வாகனத்தை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்கினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்தது. அதில் இருந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள்.
இந்த தாக்குதலை அரங்கேற்றியதும், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





