அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு ‘நோட்டீஸ்..!
அவதுாறு வீடியோ பதிவை வெளியிட்ட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ல் தி.மு.க. அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் குறித்து வீடியோ வெளியிட்டார்.
இது, அவதுாறு பரப்பும் வகையில் உள்ளது. அண்ணாமலை, 48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால், அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும். மேலும், இழப்பீடு தொகையாக, 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என, தி.மு.க. எம்.பி, டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஏற்கனவே இழப்பீடு கோரி, அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோ நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




