--- --:--:-- --

பெண் அதிகாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து அட்டூழியம் செய்த மணல் கொள்ளையர்கள்..!

5

பிஹார் மாநிலத்தில் பாட்னா அருகே மணல் கடத்தல் காரர்கள் மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து கனிமவளத் துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்றார்.

 

அங்கு மணல் கடத்தல் காரர்கள் அந்த பெண் அதிகாரியை தலைமுடியை இழுத்து பிடித்து தரதரவென இழுத்து சென்று தாக்கினர். கற்கள், கட்டை கொண்டு தாக்கினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon