கள்ளக்குறிச்சியில் தனது காலணியை உதவியாளரை எடுக்க வைத்த மாவட்ட ஆட்சியர்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட உதவியாளரை தனது காலணியை கையால் எடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரண்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வு பணிக்காக சென்ற ஆட்சியர் தனது காலணியை கழற்றிய பிறகு தனது உதவியாளரை அழைத்து காலனியை கையால் எடுக்க செய்துள்ளார். உதவியாளர் ஆட்சியரின் காலணியை கையால் எடுத்து சென்று காருக்குள் வைத்துள்ளார்.
தற்பொழுது இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





