--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரீத முடிவு..!

4

விருதுநகர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் அருகே லிங்கபுரத்தில் சரவணகுமார் பெத்தம்மாள் தம்பதிக்கு ஆறு வயதில் பாண்டி செல்வி மற்றும் இரண்டு வயதில் கார்த்திகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் கணவர் சரவணகுமார் கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவருந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

 

வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்தவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பெத்தம்மாள் மற்றும் இரண்டு பிள்ளைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு சரவணகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

 

தகவலின் பெயரில் வந்த போலீசார் உடல்களை ஏற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon