மாடியில் கணவருடன் பேசிக் கொண்டிருந்த பெண் தவறி கீழே விழுந்து பலி..!
திருமுல்லைவாயில் அருகே நேற்று மாடியில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் வெங்கடாசலம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அபிராமியின் தம்பி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரவின்குமார்- அபிராமி தம்பதியினர் பின்னர் மொட்டை மாடிக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அபிராமி மொட்டைமாடி சுற்றுச்சுவற்றில் ஏறி அமர முயற்சித்த பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அபிராமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





