--- --:--:-- --

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2

பிரதமர் உள்ளிட்டோரை கொண்டு தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் கூட்டணியில் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் முறையை போலவே நீக்கம் செய்யும் நடைமுறையும் இருக்கும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோரை நியமிக்க கொலிஜியம் போன்ற முறையை ஏற்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon