மே மாதத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை…!
இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வானிலை இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலத்தின் தாக்கம் இருக்கும்.
இந்த நிலையில் இந்தியாவின் 1901ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக அளவு வெப்பம் இருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தெரிந்துள்ளது எனவும் இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்பநிலை இருக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தர்பூசணி போன்ற நீர் அதிகமான பொருட்களை சாப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





