--- --:--:-- --

தமிழ்நாட்டில் முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை

31

Cerebral Aneurysm என்ற சிக்கலான பாதிப்பிருந்த 50 வயதான ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக “டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை” என்று அழைக்கப்படும் சிக்கலான மற்றும் நுட்பமான மூளை – அறுவை சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலுள்ள (MMHRC) மூளை – நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

 

தலைவலி, பேச்சிழப்பு, வலது கண்ணில் பார்வை இழப்பு மற்றும் இடது புற கை கால்களில் பலவீனம் போன்ற பிரச்சனைகளுடன் இந்நோயாளி இம்மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு வரை இவர் எவ்வித பாதிப்புகளுமின்றி, இயல்பானவராகவே இருந்த போதிலும், பாதிப்பு அறிகுறிகள் தோன்றியதற்குப் பிறகு மிக வேகமாகவே அவை வளர்ந்தன.

 

தொடக்கத்தில் அவரது சொந்த ஊரிலேயே இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் இங்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

 

இம்மருத்துவமனையில் இப்பெண்மணிக்கு செய்யப்பட்ட பிரெய்ன் எம்ஆர்ஐ மற்றும் டிஜிட்டல் சப்டிராக்‌ஷன் ஆஞ்சியோகிராஃபி ஆகிய பரிசோதனைகளின் மூலம், வலது பேசல் கேங்க்லியாவில் கடுமையான மாரடைப்புடன் கூடிய ராட்சத த்ரோம்போஸ்டு சூப்ராக்ளினாய்டு அனீரிஸம் இருந்தது கண்டறியப்பட்டது.

 

இந்நோயின் தன்மை குறித்தும் இதற்கான அறுவைசிகிச்சை மற்றும் அதன் சாதக, பாதகங்கள் பற்றியும் இந்நோயாளியின் குடும்ப உறுப்பினர்களோடு மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் மூளை நரம்பியல் உணர்விழப்பு மருத்துவர்கள் குழு விரிவாக விவாதித்து ஆலோசனை வழங்கியது. அதனைத் தொடர்ந்து Double-barrel Superficial Temporal Artery–Middle Cerebral Artery (STA–MCA) bypass surgery with parent vessel occlusion சிகிச்சை இந்நோயாளிக்கு செய்யப்பட்டது.

 

அதிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிப்பதற்கு ஏறக்குறைய 10 மணி நேரங்கள் எடுத்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்மறை நிகழ்வுகள் ஏதுமின்றி இந்நோயாளி நன்றாக தேறியதன் காரணமாக அறுவைசிகிச்சைக்குப் பிறகு 10-வது நாளன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்திருக்கும் இப்பெண்மணி அவரது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கியிருக்கிறார்.  வெற்றிகரமான இந்த அறுவைசிகிச்சையை செய்த மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் மருத்துவர் வெங்கடேசன் MS MCh இதுபற்றி கூறியதாவது அறுவைசிகிச்சை என இந்த சிகிச்சை கருதப்படுகிறது.

 

நுண்ணோக்கி, இன்ட்ரா op ICG மற்றும் மூளை செயல்பாடுகளின் கவனமான கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியோடு இந்த நுட்பமான அறுவைசிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்து நோயாளியின் மூளைக்கான இரத்த ஓட்டத்தை மீண்டும் ஏற்படுத்தினோம். MMHRC – ல் கரோட்டிட் என்ட்ரெக்டமி (Carotid endarterectomy) மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற செரிப்ரல் ரீவாஸ்குலரைசேஷன் சிகிச்சைகள் செய்யத் தொடங்கியிருப்பது எனக்கு பெருமையும், பெருமிதமும் அளிக்கிற தருணமாக இருக்கிறது.”

 

மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர். செல்வ முத்துகுமரன் MCh பேசுகையில், “ செரிப்ரல் ரீவாஸ்குலரைசேஷன் செயல்முறைக்கான ஒரு முக்கிய கருவியாக எக்ஸ்ட்ரா கிரானியல் – இன்ட்ராகிரானியல் (EC-IC) அல்லது STA-MCA பைபாஸ் திகழ்கிறது. மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான ஒரு செயல்முறையாக இது இருக்கிறது.

 

வெளிப்புற கரோனரி தமனியின் ஒரு கிளையை, உட்புற கரோட்டிட் தமனியின் ஒரு கிளையோடு நேரடியாக இணைப்பது இச்செயல்முறையில் இடம்பெறுகிறது. மூளையில் ஏற்படும் பல்வேறு செரிப்ரோ வாஸ்குலார் இஸ்கீமிக் நோய்களின் சிகிச்சையில் இந்த மருத்துவ செயல்முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடைப்பு ஏற்பட்டுள்ள இதயத்தமனிகளில் பைபாஸ் செய்யப்படும் பைபாஸ் போன்றே இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.” என்று கூறினார்.

 

உணர்விழப்பு மருந்தியல் துறை நிபுணர் டாக்டர். செந்தில் குமார் MD பேசுகையில், “மூளையில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு உணர்விழப்பு மருந்தை பயன்படுத்துவது என்பது மிகவும் சவாலானது. ஏனெனில், அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரம் நெடுகிலும் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படும் மற்றும் செரிப்ரல் பரபியூஷன் செயல்பாட்டைத் தொடர்ந்து பராமரிப்பது அவசியமானது.” என்று குறிப்பிட்டார். MMHRC – ன் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். B. கண்ணன், ஊடகவியலாளருடனான இச்சந்திப்பு நிகழ்வில் உடனிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon