--- --:--:-- --

காரில் கடத்தி கொண்டுவரப்பட்ட கஞ்சா பறிமுதல்..விஏஓ கைது..!

6

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கத்தக்குருச்சி கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர் ஜெயரவிவர்மன். இவர் அரசு ஊழியர்கள் நிரம்பிய குடும்பத்தை சார்ந்தவர். இவர் முதலில் வாண்டாகோட்டை, வெண்ணாவல்குடி,பாலையூர் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

 

தற்போது கோவிலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் பாலையூரில் விஏஒவாக பணிசெய்யும் போதே மணல் திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது சேர்மார்கெட்டில் சம்பாதித்த பணத்தை விட்டுள்ளாராம்.

 

அதை ஈடுசெய்ய கஞ்சா விற்றால் ஆறுமாதத்தில் கடனை அடைத்துவிடாலாம் என்று எண்ணிய கோவிலூர் விஏஒ ஜெயரவிவர்மன், ஆலங்குடி வருவாய்துறை அதிகாரி ஏமாற்றி தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கஞ்சா விற்பணை சுமார் மூன்று மாதத்திற்கு மேலாக செய்து வந்துள்ளார். இவர் பல செல்போன் எண்களை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. இவர் பணியிடமாற்றத்திற்கு, அவர் கேட்கும் இடம் கிடைக்கவில்லை என்றால் சாதி வைத்து மிரட்டலில் ஈடுபடுவதாக தெரிகிறது.

 

இம்மாதிரியான நபர்களால்,நேர்மையாக உள்ள அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்காத விஏஒவை பெயரும் கெடுவதாக பொதுமக்கள் நினைக்கின்றனர். இந்த ஜெயரவிவர்மாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் ஒழுக்கம்கெட்ட விஏஒவை மாவட்டநிர்வாகம் களைந்துஎடுக்கவேண்டும்.

 

இவரின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதுவரை பட்டாமாறுதல் செய்ததை நேரடி விசாரணை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon