அடுத்தடுத்து போராட்டங்கள் நடக்கும் – ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தர்மபுரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் அந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தவர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தமிழக அரசு தங்களது மிக முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறி வருகிறது.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் மூன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டமும் மார்ச் 24ஆம் தேதி மனித சங்கிலி போராட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறினார்.
இதேபோல புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் வரும்
ஐந்தாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





