--- --:--:-- --

ரயிலில் தரமற்ற உணவு..காட்டமாக பேசிய பெண் பயணி..!

6

பூமிகா என்ற பெண் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயிலில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். பாதி சாப்பிட்டு முடித்த நிலையில் அந்த உணவை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் எஸ்ஆர்டிசி அதிகாரிகளை நீங்கள் தயாரிக்கும் உணவை நீங்களே சுவைத்து பார்த்தது உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார். சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு போல இருக்கிறது என்றும், இந்த உணவை உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுப்பீர்களா என்றும் காட்டமாக கேட்டுள்ளார்.

 

ராஜஸ்தானில் சென்றாலும் சரி சடாப்தியில் சென்றாலும் சரி, உணவின் தரம் குப்பைதான் என்றும், ஆனால் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon