நாளைக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!
பச்சை பயிறு, உளுந்து வகைகளை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் நாளைக்குள் அதற்கான பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாலடி அறுவடைக்கு பிறகு நெல் கரிசில், பச்சை பயிறு, உளுந்து போன்றவை சாகுபடி செய்வது வழக்கம். அப்படி பச்சை பயிறு உளுந்து சாகுபடி செய்பவர்கள் நாளைக்குள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பயிர் காப்பீடு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு, இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கும். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 50,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





