குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 16 ஓட்டுநர்களை தூக்கிய போலீஸ்..!
கேரளாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய அரசு தனியார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் 16 பேர் பிடிபட்டனர். இவர்களுக்கு தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் ஓட்டிய பேருந்துகளும் காவல் நிலையத்திற்கு மற்ற டிரைவர்களால் ஓட்டி செல்லப்பட்டது.
பின்னர் காவல் நிலையத்தில் வைத்து குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன் என்று ஆயிரம் முறை எழுதிக் கொடுத்த பிறகு ஜாமீன் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





