தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக ஆட்சியரிடம் பெண் புகார்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக புகார் அளிந்துள்ளது. மஞ்சு பிரசவ மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துள்ளது.
இதனிடையே மஞ்சுவின் உயிரை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். தமக்கு தவறான சிகிச்சை அளித்ததாலேயே குழந்தை இறந்ததாகவும் தனது கர்ப்பப்பை அகற்றப்பட்டது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மஞ்சு புகார் அளித்துள்ளார்.
ஆட்சியர் கார்மேகத்தின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





