வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் இவர்கள் படும் துயரம் ஏராளம்.
இவ்வாறு மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை பராமரிக்கும் மகள் மருத்துவத்துடன் பகிர்ந்த இரண்டு நிமிட வீடியோ இணையத்தில் வருகிறது.
இதைப்பற்றி அந்த வீடியோவில் பேசிய மகள் என் தந்தையுடன் நான் பேசிக் கொண்டிருந்தாலும், நான் தான் இவரின் மகள் என தெரியாமல் பேசுகிறார் என்றும், என் சகோதரி மற்றும் என்னுடைய அம்மா குறித்து கேள்வியை கேட்டதற்கு எனது வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் என்றும் எப்போதும் அவர்களை நான் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என்று தனது அப்பா தெரிவித்ததாக மகள் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது மகள்களை அற்புதமான புத்திசாலி, விரைவான, கூர்மையான மற்றும் ஒரு தந்தை கனவு அனைத்தும் எனது மகள் என அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன் மகள்களை விட்டு பிரிந்து செல்லும் பொழுது எப்படி அழுவேன் என்றும் அவர்களது அன்பை தனது கண்ணீரில் உணர்ந்ததாகவும் அதில் அவர் பகிர்ந்து கொண்டார்.