திமுக, விசிக கூட்டணி மேலும் வலுப்பெறும் : திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகள் இணைந்தால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 

டெல்டா மாவட்டங்களில் சமீபத்திய மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறிய திருமாவளவன் தமிழக அரசு அறிவித்துள்ள 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் போதுமானதாக இருக்காது எனவும் கூறினார்.