--- --:--:-- --

2070-ல் முழுமையாக பசுமை எரிசக்திக்கு மாறும் இந்தியா – பிரதமர் மோடி

1

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் இந்தியாவிற்கு புதிய பாதையை காட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா எரிசக்தி மாறும் என்ற பெயரில் கருத்தரங்கம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 

இந்தியாவின் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எரிசக்தி வளர்ச்சியில் இந்தியா மிகச் சிறப்பாக முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் இது நாட்டுக்கான புதிய பாதையை நடப்பு நூற்றாண்டில் காட்ட உள்ளதாக கூறினார்.

 

இந்திய எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். 2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்திக்கு இந்தியா முழுமையாக மாறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

இந்திய ஆயில் நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் உருவாக்கி அடுப்புகளை இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon