பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் ஆதார் இணைப்பது கட்டாயம்..!
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது.
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதி குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் ஆதார் எண்ணை அடையாளமாக சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை ஆதார் எண் தரப்படாத நிலையில் பெற்றோர் மூலம் விண்ணப்பித்து அதை கொண்டு திட்டத்தின் கீழ் பயன்பட விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் விண்ணப்பித்து காத்திருப்போர் அதற்கான ஆவணங்களையும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கூறுகின்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





