நிலக்கரி இயந்திரங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
தூத்துக்குடியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக புதிதாக 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக திறன் கொண்ட நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.
இதனால் ஆண்டுக்கு சுமார் 80 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சேமிப்பாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் பணிகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





