ஜோடியாக நிச்சயதார்த்தத்தில் சித்தார்த், அதிதி ராவ்..!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரில் ஒருவர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது சித்தார்த் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் அதிதி பிறந்த நாள் அன்று சித்தார்த் ,” என் இதயத்தின் இளவரசியே” என்று பதிவிட்டுருந்தார். இந்நிலையில் தெலுங்கு ஹீரோ ஷர்வானந்தின் நிச்சயதார்த்தத்திற்கு சித்தார்த்தும், அதிதியும் ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




