--- --:--:-- --

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..!

8

திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் மனித உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ள காதலனை 10 மணி நேரத்திற்கு போலீசார் கைது செய்தனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஏரியில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புக்கூடை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பம்பு செட்டில் தங்கி இருந்த குடும்பத்தினரை காணவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அங்கு தங்கியிருந்த சித்ரா என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கள்ள காதலன் சக்திவேல் உடன் சேர்ந்து தனது கணவனை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

 

இதையடுத்து சித்ரா மற்றும் அவரது கள்ள காதலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon