பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..திமுகவினரிடம் விசாரணை..!
சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் திமுக பிரமுகரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயது பெண் காவலருக்கு இரண்டு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் இரண்டு பேரையும் காவலர்கள் பிடித்து விசாரித்ததில் அவர்கள் திமுக நிர்வாகிகள் என தெரியவந்தது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக ஆட்சியில் பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லையா என அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இது போன்ற சூழலில் பிடிபட்ட திமுகவினர் இரண்டு பேரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்று கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் காவலர் புகார் எதையும் தெரிவிக்கவில்லை எனவும் காவல் ஆணையர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





