அமைச்சரின் மீது பாலியல் வழக்கு.. திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!
பாலியல் வழக்கில் சிக்கிய ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா முதலமைச்சர் தலைமையில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப் சிங்.
இவர் தடகள பெண் பெயர்ச்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் சந்தீப் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சந்தீப் சிங் தனது அலுவலகத்தில் வைத்து பெண் பயிற்சியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தீப் தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





