--- --:--:-- --

மெக்காவுக்கு சென்று விட்டு திரும்பிய நபருக்கு நடுவானில் திடீர் நெஞ்சு வலி..!

7

மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய தமிழக பயணி விமானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது நடுவானில் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த ராஜா முகமது அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சில நாட்களுக்கு முன்பு மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

 

வழிபாடுகளை முடித்துக் கொண்டு நேற்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது நடுவானில் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பிய விமானி சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கினார்.

 

ஆனால் முதலுதவி சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜா முகமது உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை விமான நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் இரண்டரை மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் புறப்பட்டு சென்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon