--- --:--:-- --

புத்தாண்டுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு..!

8

மிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு விரித்துள்ளது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது 31ஆம் தேதி பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடுமாறு அறிவித்துள்ளது. நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறைய எச்சரித்துள்ளது.

 

புத்தாண்டின் பொழுது பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

விதி மீறல்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவலை காவல்துறைக்கு தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon