--- --:--:-- --

பொதுவெளியில் இளம் வயதினரிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட பெண் யூடியூபர் மீது புகார்..!

6

கா மட்டமான கேள்விகளை மாணவ மாணவிகளிடம் கூச்சமின்றி கேட்டு வீடியோவாக பதிவு செய்து youtube இல் பதிவேற்றி வருவதாக youtube பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

சென்னை மெரினா கடற்கரையில் கையில் மைக்குடன் சுற்றிய டாக்சி யூட்யூபில் பெண் வர்ணனையாளர், இளம் பெண்களை படம்பிடித்த கேமராமேனையும் அடக்கிய வழக்கறிஞர் ஒருவர் போலீசுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.

 

கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் கேள்வி கேட்டு பிரான்க் செய்து அதனை யூட்யூபில் பதிவிடுவதாகவும் புகார் தெரிவித்தார். கேமராவை பறிமுதல் செய்ததோடு இருவரையும் காவல் நிலையம் வந்து பெற்றுச் செல்லுமாறு கூறி சென்றனர்.

 

காவல் நிலையத்தில் வைத்து யுடியூபரிடம் விசாரித்த காவல்துறையினர் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்ததோடு இனிமேல் இவ்வாறு தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon