--- --:--:-- --

நான் உங்கள் வீட்டு வேலைக்காரி இல்ல..நடுவானில் சண்டை போட்ட பயணிக்கு பதிலடி கொடுத்த பணிப்பெண்..!

8

இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவருக்கும், விமான பணிப்பெண் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த வாரம் விமான நிலையத்திலிருந்து டெல்லியை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பணிபுரியும் விமான பணிப்பெண்ணை வேலைக்காரி இங்கு வா என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விமான பணிப்பென் ஏன் எங்களை அப்படி அழைக்கிறீர்கள் என வினவியுள்ளார்.

 

ஒரு கட்டத்தில் பயணி கோபத்தில் கத்த ஆரம்பித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக கத்தாதீர்கள் நான் ஒன்றும் உங்கள் வீட்டு வேலைக்காரி அல்ல. நிறுவனத்தில் பணிபுரியும் பணிப்பெண் நான் என பதிலடி கொடுத்துள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தரப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon