--- --:--:-- --

அஜாக்கிரதையால் எலி பேஸ்டை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை..!

7

புதுச்சேரியில் சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேரி ரோஸ்லின் கணவர் இறந்த நிலையில் மூன்று வயது குழந்தை தியா மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

 

மேரி ரோஸ்லின் வேலைக்கு செல்லும் நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எலிபேஸ்ட்டை எடுத்து தின்று விட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை உயிரிழந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon