--- --:--:-- --

துடிக்க துடிக்க நண்பனை கொன்று வீடியோ எடுத்து வெளியிட்ட கும்பல்..!

9

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கஞ்சா போதையில் இளைஞரை கொலை செய்த கும்பல் அதனை வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

காட்பாடி அடுத்த செங்கோட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞர் கடந்த 13ஆம் தேதி அவரது நண்பர்களால் பெட்டி கொலை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டார்.

 

வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டதை வீடியோவாக எடுத்த கும்பல் அதனை அவரது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்ததன் அடிப்படையில் வெங்கடேஷ் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக திவாகர், சதீஷ், அந்தோணி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற மூன்று பேர் வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் தற்பொழுது வெங்கடேஷ் கொலை செய்யப்படும் முன்பாக எடுக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

 

அந்த வீடியோவில் கால்களை கட்டி போட்டு கைகளை பிடித்தவாறு கொலை செய்யப் போவதாக கும்பல் மிரட்டுவதும் தன்னை விட்டு விடுங்கள் என வெங்கடேஷ் கூறுவதும் அதில் இடம்பெற்றுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon