--- --:--:-- --

தமிழகத்தில் பரவலாக தொடர் மழை..!

5

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

 

இதனால் நேற்று இரவு இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர், செம்பனார்கோவில், திருக்கடையூர், தரங்கம்பாடி மற்றும் துறையூரில் விட்டு விட்டு மழை பெய்தது.

 

இதனால் 28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon