--- --:--:-- --

கிராம உதவியாளர் பதவி தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகி சர்ச்சை..!

25

மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவி தேர்வுக்கான விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாற்றப்படும் என்று ஆட்சியர் தரப்பில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் ஆங்கில தேர்வு தகுதி தேர்வுக்கான விடைத்தாள்களை சிலர் சமூக வலைதளங்களில் மூலமாக வெளியிட்டதோடு மொத்த விடைத்தாள்களையும் பெற பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கிறார் என கோரப்படுகிறது.

 

இதுகுறித்து மதுரை ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் தேர்வுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் கொடுக்கப்படும் என்றும், விடைத்தாள்களை பதியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon