அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையின் பொழுது கைப்பேசிகள் திருட்டு..!
டெல்லியில் மாநகராட்சி தேர்தலுக்கான பரப்புரையின் பொழுது முக்கிய பிரமுகர்கள் உட்பட 20 பேரின் கைபேசிகள் திருடு போயியுள்ளன. டெல்லி மாநகராட்சிக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி மும்முனை போட்டி நிலவும் நிலையில் பரப்புரை களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 20 பேரின் கைபேசிகள் திருடு போயின.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்க பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





