மதுரையில் தேசிய மருந்து கல்வி நிறுவனத்தை அமைக்க கோரி வழக்கு..!
மதுரையில் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க கூறிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகளை உத்தரவிட்டுள்ளது.
மணிபாரதி என்பவர் தொடர்ந்து வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயணன் பிரசாத் அமர்வு உண்டு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது எட்டாவது நிதியாண்டிலும் மதுரையில் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரையில் அமைக்க பரிந்துரை செய்ததாகவும் அதன் அடிப்படையில் தமிழக அரசு 116 ஏக்கர் நிலத்தினை இலவசமாக ஒதுக்கியதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தேசிய மருந்து கல்வி நிறுவனத்தை மதுரையில் தொடங்குவது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





