சாகும் வரை இப்படி நோயால் பாதிக்கப்படுவாரா பிரபல நடிகை பூனம் கவுர்..!

மிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தாவிற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து தகவல் வர அதனால் ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தார்கள். இப்படி குணப்படுத்த முடியாத நோயெல்லாம் நடிகைக்கு வர வேண்டுமா என்ற அளவிற்கு ரசிகர்கள் புலம்பி வந்தார்கள்.

 

இப்போது இன்னொரு நடிகை நோயால் பாதிக்கப்பட்டு வருவது குறித்து தகவல் வந்துள்ளது. தெலுங்கில் சில படங்களே நடித்து பிரபலம் ஆனவர் நடிகை பூனம் கவுர். தற்போது இவர் குறித்து ஒரு சோகமான தகவல் வந்துள்ளது.

 

நடிகை பூனம் ஃபைப்ரோமியால்ஜியா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இந்த நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக்கொள்ள வேண்டுமாம். பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் என்கின்றனர்.