காரில் சிக்கிக் கொண்ட குழந்தை..!

டலூர் மாவட்டம் திட்டக்குடி பெருங்குடி கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஒன்று பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த உறவினரின் காரில் விளையாடிய பொழுது எதிர்பாராத விதமாக உள்ளே மாட்டிக் கொண்டதால் பெற்றோர்கள் துடிதுடித்து போயினர்.

 

காரின் சாவியும் உள்ளே இருந்ததால் காரை திறக்க முடியாமல் உரிமையாளர் திணறினார். இதையடுத்து மெக்கானிக் உதவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.