பிரியாணியில் பூரான் விழுந்த விவகாரம்..!
சென்னை மாநகரத்தில் உள்ள உணவகத்தில் பிரியாணியில் பூரான் விழுந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அந்த உணவகத்தில் கடந்த 22 ஆம் தேதி வாடிக்கையாளர்கள் உணவு அருந்தியபொழுது பிரியாணியில் பூரான் கடித்தது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது சமையலறையில் தூய்மையில்லாமலும் தயாரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும் திறந்த நிலையில் அதில் பூச்சிகள் மற்றும் ஈக்கள் மொய்த்தபடி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் உணவை கையாண்டவர்கள் தலைக்கவசம் கையூரை ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





