மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..!
சென்னை மடிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். சென்னை வேளச்சேரி அடுத்து இருக்கக்கூடிய பெரியார் நகரில் இந்த சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது. மடிப்பாக்கம் பிரதான சாலையில் சென்டர் மீடியன் உள்ளது.
சென்டர் மீடியனில் நடுவில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த மின் விளக்கு மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிபள்ளிக்கரணை சேர்ந்த இளவரசன் என்ற நபர் நேற்றிரவு 12 மணிக்கு இந்த பகுதியில் வந்துள்ளார்.
காரை எதிர்திசையில் நிறுத்திவிட்டு மளிகை கடைக்கு வந்துள்ளார். சாலை தடுப்பில் உள்ள மின் விளக்கின் மின்கம்பி இருந்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





