--- --:--:-- --

வங்கியில் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி ..!

4

சேலத்தில் கனரா வங்கியில் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிச்சை பாளையம் பகுதியில் இயங்கிவரும் கனரா வங்கி கணக்கில் ஒரு நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உட்பட ஊழியர்கள் வழக்கம்போல் பணியாற்றியுள்ளனர்.

 

அப்பொழுது வங்கி அருகே உள்ள மினி பஸ்சில் பணியாற்றும் சிலர் வங்கியின் சுவரில் துளையிடப்பட்டுள்ளதாக வங்கி மேலாளரிடம் தெரிவித்தனர். இது குறித்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon