ஆவின் பாலகத்தில் வாங்கப்பட்ட குலோப்ஜாமுனில் பூஞ்சை..!
நாகர்கோவிலில் ஆவின் பாலகத்தில் வாங்கப்பட்ட குலோப்ஜாமுன் காலாவதி தேதி முடியும் முன்பே பூஞ்சையுடன் காணப்பட்டதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நாகர்கோயில் ஆவின் பாலகத்தில் இன்று குலோப்ஜாமுனை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது அதில் பூஞ்சை இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் குலோப்ஜாமுன் அக்டோபர் 14-ஆம் தேதி தயாரிக்கப்பட்டது என்றும் காலாவதி தேதி அக்டோபர் 22 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட ஆவின் பாலகத்தில் சென்று குலோப்ஜாமுனை ஒப்படைத்துச் சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





